ஞாயிறு, ஜூலை 24, 2016

திருமலாபுரம் என்ற சொர்க்கம்

திருமலாபுரம் என்ற சொர்க்கம்

மகிழ்ச்சி & நன்றி திரு Michael Amalraj

திருமதி Christina Pappu & குடும்பத்தினர்

நன்றி ஈரோடு கதிர் சார் – 2 வருடங்களுக்கு முன்பு குற்றாலம் செல்லுமுன் திரு மைக்கேல் அமல்ராஜ் அவர்கள் வீட்டுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தார்.  அப்போது குடவரைக் கோவில் (திருமலாபுரம் – சேர்ந்த மரம் என்ற ஊர் அருகில் – அருகிலுள்ள பெரிய ஊர் சுரண்டை) பற்றி படம் பகிர்ந்திருந்தார்கள்.  கழுகுமலை தான் குடவரைக் கோவில் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம், எனவே இது புதிய செய்தியாக இருந்தது.  பிறகு ஒரு செய்தியிலும் திருமலாபுரம் குடவரைக் கோவில் பற்றி படித்தேன்.
 
திரு மைக்கேல் அமல்ராஜ் அவர்கள் ஏற்கனவே புத்தகம் அனுப்பியிருக்கிறார், அதில் தொடர்பு, எனவே போன் செய்து கேட்டேன், எப்படி உங்கள் ஊருக்கு வர வேண்டுமென.  இவர்கள் ஊர் எங்கள் ஊர் வத்திராயிருப்பு மாதிரி, பிரதான சாலையிலிருந்து கொஞ்சம் பிரிந்து உள்ளே செல்ல வேண்டியதிருப்பதால் நிறைய பேருடைய கண்களில் இந்த திருமலாபுரம் குடவரைக் கோவில் படவில்லை.

திரு மைக்கேல் அமல்ராஜ் விவசாயி, பொது வாழ்வில் ஈடுபாடுள்ளவர், குற்றால சீசன் சமயங்களில் அங்கு வியாபாரத் தொடர்பு இருக்கிறது, எனவே ஜுன் முதல் செப்டம்பர் வரை அவர் தொழிலில் பிஸி.  அவரது மனைவி திருமதி கிறிஸ்டினா பாப்பு அவர்கள் பள்ளி ஆசிரியை.  எனவே அவர்களுக்குச் சிரமம் இல்லாத சமயங்களில் செல்ல வேண்டுமென நினைத்தோம்.

பஸ்ஸில் சென்றால் எளிது போலும், சங்கரன் கோவிலிலிருந்து சுரண்டை செல்லும் பேருந்தில் - சேர்ந்த மடம் – என்ற ஊரில் இறங்கினால் இவர்கள் ஊர் திருமலாபுரம் அருகில், ஆட்டோவில் சென்று விடலாம்.

எங்களுக்கு பஸ் பிரயாணம் சிரமம்.  எனவே திரு மைக்கேல் அமல்ராஜ் அவர்களிடம் ரயிலில் வந்து ஆட்டோவில் அல்லது பஸ்ஸில் வருகிறேன் என்றேன்.  அவர் சில மாற்று வழிகள் சொன்னார்.

ரயிலில் அல்லது பஸ்ஸில் சங்கரன் கோவில் வந்து அங்கிருந்து சுரண்டை பஸ்ஸில் வந்து சேர்ந்த மடம் என்ற ஊரில் இறங்கலாம்.

ரயிலில் பாம்பக்கோவில் சந்தை வந்து அங்கிருந்து சுரண்டை பஸ்ஸில் வந்து சேர்ந்த மடம் என்ற ஊரில் இறங்கலாம்.

ரயிலில் கடைய நல்லூர் வந்து அங்கிருந்து ஆட்டோவில் திருமலாபுரம் வரலாம், சுமார் 8 – 10 கி.மீ. இருக்கும் என்றார். 

எனக்கு கடைய நல்லூர் மிகவும் பிடித்த ஊர்.  அங்கு எங்கள் இனிய நண்பர் திருமதி பாலபாரதி அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.  அவர் ஒரு ஆட்டோ நண்பரின் எண் கொடுத்து, அவரிடமும் சொல்லி விட்டு, எனக்கு போன் செய்தார்.  வெளியூர் செல்லும் போது இப்படி நண்பர்கள் வாய்ப்பது கொடுப்பினை.

நாங்கள் 29.5.16 வருவதாக திரு மைக்கேல் அமல்ராஜ் அவர்களிடம் உறுதி செய்தேன்.  காலை எங்கள் வீட்டில் சாப்பிட்டு வந்து விடுகிறோம், மதியம் உங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு மாலை 3 மணிக்கு திரும்ப ஆட்டோவில் கிளம்புகிறோம்.  கடைய நல்லூர் ரயில் நிலையத்தில் கொஞ்சம் காத்திருந்து 4.20 பாசஞ்சரில் ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்புகிறோம் என்றோம், சரியான திட்டம் தான் என்றார்.

(நண்பர்களுக்கு ஒரு யோசனை, நீங்கள் நண்பர்களைப் பார்க்கச் செல்லும் போது உணவு விஷயத்தில் தெளிவு படுத்தி விடுங்கள், எத்தனை பேர் செல்வீர்கள், உணவுப் பழக்கம், முடிந்த அளவு – சைவமா, அசைவமா, எந்த நேரம் உத்தேசமாக செல்வீர்கள், அங்கிருந்து கிளம்புவீர்கள், உங்களை உபசரிப்பவர்களுக்கும் நிறைய பணிகள் இருக்கும், அவர்கள் வெளியே கிளம்ப வேண்டியது, ஓய்வு எடுக்க வேண்டியது என).

இனி பயணம்:

இவர்களிடம் தெளிவு படுத்தி விட்டோம், இன்றைய பயணம் உங்கள் வீடு மட்டும் தான் என.  கடைய நல்லூர் ரயில் நிலையத்தில் காலை 10.15 வாக்கில் சென்றடைந்தோம்.  திருமதி பாலபாரதி சொல்லியிருந்த ஆட்டோ நண்பர் காத்திருந்தார்.  கடைய நல்லூர் 1 கி.மீ. தாண்டியிருப்போம், வயல்கள் பார்க்க அவ்வளவு பசுமையாக இருந்தன, ஆட்டோ நண்பர் சொன்னார், ஐயா, ஒரு போகம் நெல் அறுவடை செய்து மறு போகம் அறுவடைக்கு தயாராக இருக்கிறதென்றார்.

சிலு சிலு காற்று, ஆஹா, சொர்க்கம் என்றால் இது தான்.

நாங்கள் செல்லும் வழியிலேயே இவர்கள் எல்லாம் இந்த இடங்களைப் பார்க்க வேண்டுமென நினைத்தேன்.

எங்கள் அருமை மகள் தீபா நாகராணி
திருமதி பால பாரதி
திருமதி சக்தி ஜோதி
ஜெய சுதா (தீபன் அம்மா)
பானு சசிந்தனா குடும்பத்துடன்

எங்கள் மகன்கள் குடும்பத்துடன்
ராஜவேல் (புகைப்படங்களுக்காக)
கிர்த்திகா தரன்
எங்கள் மூத்த அண்ணாச்சி மகன் வைரவேல் குடும்பத்துடன்
எங்கள் அருமை மகள் மீனாட்சி குடும்பத்துடன்
திரு கனவுப் பிரியன் குடும்பத்துடன்
திரு கார்த்திக் புகழேந்தி
திரு நாறும் பூ நாதன் சார் குடும்பத்துடன்

ஒவ்வொரு ஊராக கடந்து வந்தது.  ஒரு மலை, மலை மேல் சர்ச் தோன்றியது.  திரு மைக்கேல் அமல்ராஜ் நாங்கள் சென்ற ஆட்டோ எதிர்பார்த்திருந்து நின்றிருக்கிறார், எங்களை அந்த மலைக்கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

அந்த மலை அதிலுள்ள கோவில் எல்லாம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அருமையாக பராமரிக்கப்படுகிறது.  நல்ல இரும்பு பாலம் போன்ற அமைப்பு, அருமையாக பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கிறது, எனவே வெயில் இருந்தாலும் இரும்பு சூடு தெரியவில்லை.  நல்ல கைப்பிடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

உள்ளே உள்ள சிற்பங்கள் படங்கள் எடுத்து ஏற்றியிருக்கிறேன்.  எனக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள சிலைகளை நினைவுபடுத்தின.  ஒவ்வொரு படத்தின் கீழும் முடிந்த வரை எனக்குத் தெரிந்த விபரங்கள் எழுதியிருக்கிறேன்.  மலையிலே ஒரு சுனை இருக்கிறது. அது நல்ல ஆழமான சுனை, 4 அடி அளவுக்கு தண்ணீர் இருக்கும். 

அந்த மலையின் மேலே ஒரு சர்ச் இருக்கிறது. அந்த சர்ச்சில் சனிக்கிழமை வழிபாடு நடக்கும் என்றார்கள்.  நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மக்கள் மலை மேல் செல்வதைப் பார்க்க முடிந்தது. 

அந்த மலையில் நாங்கள் இருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் வந்தார், அவர் பெயர் திரு பிலிப் செல்வம், புளியங்குடிக்காரர், எங்களுக்கு படங்கள் எடுக்க உதவி செய்தார்.  அவருக்குத் தெரிந்த தகவல்களும் சொன்னார்.

மலைக்கோவிலை பார்த்து விட்டு திரு மைக்கேல் ராஜ் அவர்கள் வீட்டுக்குச் சென்றோம்.  மலையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் தான் இருக்கும்.  ரம்யமான சூழல்.  மிகவும் குறைந்த ஜனத்தொகை உள்ள கிராமம், 3000 எண்ணிக்கைக்குள் தான் ஜனத்தொகை இருக்கும் என்றார், இவரது கிராமம் ஒரு பஞ்சாயத்தின் கீழ் வருகிறது, அந்த பஞ்சாயத்தில் 4 கிராமங்கள் இருக்கின்றன, எங்கள் ஊர் அதில் ஒரு கிராமம் என்றார்.  தெருக்கள் திரு பாரதி ராஜா படங்களில் உள்ள அமைப்பை நினைவு படுத்துகிறது.  வெயில் தெரியவில்லை, அவ்வளவு சிலுசிலு காற்று. 

திரு ரவி நாக் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எங்கள் வீட்டுக்கு வந்த  போது சொல்லியிருக்கிறார், ஆரியங்காவு கணவாயில் காற்று வருட முழுக்க இருக்குமென்றார், இவர்கள் குடியிருப்பு ஆரியங்காவு கணவாயின் ஒரு பகுதி என்றார்.  அனைவரும் பார்க்க வேண்டிய பகுதி.

இவர் வீட்டின் மாடியில் நின்று பார்த்தால் மலை மேல் உள்ள சர்ச், மலையின் அமைப்பு அருமையாகத் தெரிகிறது.   எங்கு பார்த்தாலும் பறவைகள், கீச் கீச் சத்தம், ஆஹா அருமை.
இவர்கள் வீட்டின் அருகில் ஒரு பழமை வாய்ந்த வீடு, ஜமீன் வழி வீடா என்றேன்.  இந்த ஊர்க்காரர்கள் வீடு தான் என்றார்.  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிவகிரியார் ஜமீன் பங்களாவை (கீழ ரத வீதியில் இருக்கிறது, முன்பு EB Office இங்கு தான் இருந்தது) நினைவு படுத்துகிறது.  சுவரில் அழகாக மயில் படம் இருந்தது.  அற்புதமான மர வேலைப்பாடுகள், நன்கு பராமரிக்க வேண்டிய கட்டிடம்.

அங்கு பீடி சுற்றும் தொழில் கைத்தொழிலாக இருக்கிறது.  முன்பு மாடு வளர்ப்பு சிறப்பாக இருந்திருக்கிறது, இப்போது குறைந்து விட்டது என்றார்கள்.  அனேகமாக எல்லா வீடுகளிலும் மாட்டுத்தொழுவங்கள் இருக்கின்றன.  அங்கு உள்ள செடிகொடிகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.  அங்குள்ள காற்றும், நீர் வளமும் காரணம்.

(சில பெயர் திரிபுகள்:
சேர்ந்த மரம் – முந்தைய பெயர் சேர்ந்த மங்கலம்
சுரண்டை – சரியான பெயர் சுரந்தை – ஆங்கிலத்தில் Surandai என எழுதி சுரண்டையாக்கி விட்டார்கள், சுரந்தை என்றால் நீர் ஊற்று என வரும் என நினைக்கிறேன்.)

(இந்தப் பதிவில் கிட்டத்தட்ட 31 படங்கள் ஏற்றியிருக்கிறேன்.  எண்ணிக்கை கருதி நிறைய குறைத்திருக்கிறேன்.  இந்தப் படங்கள் எடுத்தது எனது மனைவி திருமதி உமாகாந்தி, நேரம் கருதி, வெயில் காரணமாகவும் சில படங்கள் தெளிவாக இருக்காது.  அடுத்து செல்பவர்கள் நன்கு எடுத்து விபரங்கள் சேகரித்து பதிவில் ஏற்ற வேண்டுகிறேன்.  இந்த குடவரைக் கோவில் ஒரு கலைப்பொக்கிஷம்.)

திருமதி கிறிஸ்டினா பாப்பு எங்களுக்காக அருமையான உணவு தயாரித்திருந்தார்கள்.  பாய் விரித்து, வாழை இலையில் பரிமாறினார்கள்.  அருமையான உபசரிப்பு.
 
சரியாக 3 மணிக்கு ஆட்டோ திரும்பி வந்தது.  அங்கிருந்து கடையநல்லூர் வந்து ரயிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பினோம்.  ஒரு அற்புதமான பயணம், இனிய நினைவுகள், பழமையெல்லாம் கண்டெடுத்தோம், கிராமத்தை உணர்ந்தோம், நல்ல உபசரிப்பை மகிழ்ந்தோம்.

மிக்க மகிழ்ச்சி & வாழ்த்துகள் திரு மைக்கேல் அமல்ராஜ், திருமதி கிறிஸ்டினா பாப்பு & குடும்பத்தினர் அனைவருக்கும்.
நன்றி நண்பர்களே.சனி, செப்டம்பர் 29, 2012

என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்


எனது முகநூல் நண்பர்  Ramkumar G Krish அவர்கள் “யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்!!!” என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். நண்பர் இருப்பது ஆப்பிரிக்காவில்.  அவரது அனுமதியின் பேரில் இந்த பதிவை எனது பதிவில் வெளியிடுகிறேன்.


அதற்கு முன் எனது சில வார்த்தைகள்:

எனக்கு தமிழ் தட்டச்சு கற்றுக் கொடுத்தது இலங்கை முகநூல் நண்பர் திரு Kannan Sandralingam,


அவர் திரு Dr Mutthiah Kathiravetpillai Muruganandan, கொழும்பு அவர்களது நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை திருமதி Kalaimahel Hidaya Risvi அவர்களும் எனது முகநூல் நண்பர்..  இலங்கை திரு Peer Mohamed Puniameen அவர்களும் எனது முகநூல் நண்பர்.


இந்த மூவரும் இலங்கையின் சிறந்த எழுத்தாளர்கள்.  இவர்களது கட்டுரைகளை அவர்களது அனுமதியின் பேரில் வெளியிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன். 

இன்னுமொரு முகநூல் நண்பர் Malini Shravan அற்புதமான திறமை படைத்தவர், இலங்கைத் தமிழை அற்புதமாக கையாள்கிறார்.  இவரது பதிவுகளும் எனது பதிவில் வெளியிட்டிருக்கிறேன்.

எனவே இலங்கைத் தமிழ் பற்றிய நமது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் எழுதிய பதிவை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி நண்பர்களே, இனிமேல்  Ramkumar G Krish 

இலங்கை உலகிலுள்ள மிக பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும்.  இந்திய பாறைத்தட்டின் (Indian tectonic plate ) மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை,  நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை.  இதன் 90% ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்தைய பாறைதொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறைத் தொடர்களின் நடத்திய ஆராச்சிகளின் விளைவாக இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் (லெமுரியா) பெரியதோர் தென்நிலக் கண்டத்தின் பாகமாகவிருந்தது அறியப்படுகிறது.  ஆனால் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின்,  பூமியின் உள்ளே ஏற்பட்ட அழுத்தங்கள்  காரணமாக இந்த பெரிய  கண்டம் பிளவு படத தொடங்கியது. பின்னர் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்ட இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் (Eurasian plate ) மோதி இமயமலைச்சாரல் எற்பட்டது.   இது இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இதையெல்லாம் ஜியாலஜி சம்பந்தப்பட்ட புத்தகம் படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கை, இந்து மகா சமுத்திரத்தில்  அமைந்துள்ள ஒரு அழகிய தீவாகும்இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் (Gulf of  Mannar)  துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது.  இராமர் அணை (Adam's bridge) எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தலை நிலத்துடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது.  இது 1480 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளியில் ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறை தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.

இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாக காணும்  காட்டுப் பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளோடு  (Western Ghats) நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன.  இப்படியெல்லாம் படித்த, கேட்டு வந்த இலங்கை பற்றி, மேலும்  பள்ளி  வயதில், பொன்னியின் செல்வன் படிக்கும்போது, வந்தியத் தேவன், பூங்குழலி, அருண் மொழி   வரும்போதெல்லாம் அமரர் கல்கி அவர்கள்,  தன் எழுத்தோட்டம் வாயிலாக, இலங்கையை வர்ணிப்பார், கண் முன்னே நிறுத்துவார். கல்லூரி நாட்களில் உடன் படித்த இலங்கைத் தமிழ் நண்பர்களான மதி அமுதன்,  தயாளன்,  வைகுண்ட நாதன்,  முரளி  மற்றும் இலங்கைத் தமிழ் நண்பர்களோடு பேசும் போது, அவர்கள் பேசும் தமிழ் என்னை ஈர்த்ததுண்டு.  கவனித்துப் பார்ப்பேன்,  நாம் தொலைத்து விட்ட தமிழ் வார்த்தைகள் (கதைத்தல் போன்ற) அவர்கள் உரையில் காணலாம். கேட்டாலே எரிச்சல் மூட்டும் மெட்ராஸ் பாஷை கலக்காத அழகுத் தமிழ், இலங்கைத் தமிழ் என்றும் நான் பலமுறை நினத்ததுண்டு.

இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணமாக இலங்கை தமிழை எழுத முயற்சிக்கிறேன்  விக்கிபீடியா உதவியோடு.  சற்றே உள் நுழைவோம்

பாரதி அப்போதே பாடிவைத்தார்அது மிகவும் உண்மையே...
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்............
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்."

உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், மற்றும் சமஸ்கிருதம்.  இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.  இன்றளவிலும் உலகளவில் பேசப்படும் இலக்கிய, வரலாற்று வளம் மிக்க மொழி தமிழ் மொழி என்பதில் வியப்பில்லை.

தமிழ், வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரு வடிவங்களைக் கொண்டுள்ளது.  எழுத்துத் தமிழ்,  உலகில் தமிழ் வாழும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி உள்ளது.  ஆனால், பேச்சுத் தமிழ், இடத்திற்கு ஏற்றார் போல, குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் பழகுவதை கவனித்து இருக்கலாம். இத்தகைய மொழியினை, வட்டார மொழி வழக்குகள் என்பர்.  இலங்கையின் வட பகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் என அழைக்கப்படுகின்றன.

தமிழை அதிகளவில் பேசும் மக்கள் தொகை கொண்ட தமிழகம் சில மைல்கள் தொலைவிலேயே அமைந்திருந்த போதும், யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண தமிழர்கள் பேசும் தமிழ், குறிப்பிடத்தக்க, தனித்துவம்  கொண்ட  பேச்சுத் தமிழாக  உருவானதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களே காரணமாகும்.
தமிழ் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் இன்னதுதான் என வரையறுக்கப்பட்டு இருந்தாலும், பேச்சுத் தமிழில் அவற்றின் உச்சரிப்புகள் பல வேறுபாடுகளை அடைவதை கவனிக்கலாம்.  யாழ்ப்பாணத்துத் தமிழில் இந்த உச்சரிப்புகள் எந்த அளவுக்கு சரியான விதிகளுக்கு அமைய உள்ளன என்பதைக் கருதும்போது கவனத்துக்கு வரும் அம்சங்கள் சில பின்வருமாறு.

§  யாழ்ப்பாணத்தவர்  கரத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. இங்கே  கரமும்கரமும் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகின்றன. வாழை க்கும்வாளை க்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் உச்சரிப்பு வேறுபாடு கிடையாது. (தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இதே உச்சரிப்புத்தான் உச்சரிக்கப்படுகிறது).
§  யாழ்ப்பாணத்தவர் பேசும்போது  கர -  கர கர -  கர, மற்றும்  கர - கர வேறுபாடுகள் மிகவும் தெளிவாக இருக்கும்.
§   கர மெய் இரட்டித்து வரும்போது யாழ்ப்பாணத்து உச்சரிப்பு வடதமிழ்நாட்டு உச்சரிப்புடன் ஒத்து அமைவதில்லை. வடதமிழகத்தில் ற்றற்றி .... என்பன t-rat-ri என உச்சரிக்கப்படும்போது, தென்தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைப் போல யாழ்ப்பாணத்தில் t-tat-ti என உச்சரிக்கப்படுவதாய் சொல்லப் படுகிறது.

சொற்கள்
பொதுவாக, எல்லா நாட்டு மக்களின் பேச்சு மொழி, எழுத்து மொழிக்கு  சற்றே வித்தியாசப்படும்.  அது போலவே, பேச்சுத் தமிழில் சொற்களும் பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.  சில சொற்களைக் குறுக்கி ஒலிப்பதும், சிலவற்றை நீட்டி ஒலிப்பதும், சிலவற்றின் ஒலிகளை மாற்றி ஒலிப்பதும் சாதாரணமாகக் காணக்கூடியதே. யாழ்ப்பாணத் தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல.  எனினும் சொற்களை உச்சரிப்பதில் யாழ்ப்பாணத் தமிழில் ஒப்பீட்டு ரீதியில் குறைவான திரிபுகளே இருப்பதாகக் கூறலாம்.  தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழுடன் ஒப்பிட்டு நோக்குவது இதனைப்புரிந்து கொள்ள உதவும்.

எடுத்துக்காட்டாக:

§  ன்ம் போன்ற மெய்யெழுத்துக்களில் முடியும் பல சொற்களை உச்சரிக்கும்போது, இந்த எழுத்துக்களை முழுமையாக உச்சரிக்காமல், ஒரு மூக்கொலியுடன் நிறுத்துவது தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. நான் என்பதை நா.  என்றும்மரம் என்பதை மர.  என்றும் உச்சரிப்பதைக் காணலாம்.  நான் என்பதைச் சில சமயங்களில் நானு என்று நீட்டி உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.  யாழ்ப்பாணத்தில் இச் சொற்களை நான்மரம் என்று முழுமையாக உச்சரிப்பார்கள்.

§  கர, கரங்கள் தனியாகவோ, உயிர்மெய்யாகவோ சொல் முதலில் வருகின்றபோது, தமிழ் நாட்டில் பல இடங்களில், அவற்றை முறையே கர, கரங்களாக உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாகஇடம்எடம் எனவும்குடம், கொடம் எனவும் ஆவதைப் பார்க்கலாம்.  இந்த உச்சரிப்புத் திரிபும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இல்லை.

எனினும் ஒலிகள் திரிபு அடைவது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இல்லாதது அல்ல.  இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.  பல சொற்களில்  கரம் கரமாகத் திரிபு அடைவதுண்டு.

ஒன்று என்பது ஒண்டு என்றும்வென்று என்பது வெண்டு என்றும் திரியும். இது போலவே கன்றுபன்றிதின்று என்பவை முறையே கண்டுபண்டி, திண்டு என வழங்குவதை உற்று நோக்கலாம்.

வினைசொற்கள் கையாளும் விதம்
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் உள்ளன. அவற்றை மரியாதை மிகு பேச்சு வகைஇடைநிலை பேச்சு வகை,  சாதாரண பேச்சு வகை,  மரியாதை அற்ற பேச்சு வகை என வகைபடுதுகின்றனர் மொழி வல்லுனர்கள்.
இதில் மரியாதை மிகு வகை என்பது  "வாருங்கள் அல்லது வாங்கோ", "சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ" என்று பன்மையாக பேசப்படும் வகையாகும்.  இடைநிலை பேச்சு வகை என்பது "வாரும்", "சொல்லும்" என பேசப்படும் வகையாகும்.  சாதாரண பேச்சு வகை "வா",  "போ",  "இரு" போன்று பேசப்படும் வகையாகும்.
மரியாதை அற்ற பேச்சு வகை "வாடா", "சொல்லடா" என மரியாதையற்ற பயன்பாடாகும்.  இந்த மரியாதை அற்ற சொற்கள் நண்பர்களிடையேயோஇளைய சகோதரர்களிடம் பெரியவர்களாலோகுழந்தைகளிடம் பெற்றோராலோ, சிறியவர்களிடம் பெரியவர்களாலோ பயன்படுத்தப்படும்.  சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் அவர்களிடம், "வாங்கோசொல்லுங்கோ"  போன்ற மரியாதையான சொற்களைப் பயன்படுத்தும் முறையும் உள்ளது. அதேவேளை கோபத்தில் பேசும்போதும் பேசப்படுவதுண்டு.

இவற்றில் "இடை நிலை பேச்சு வகை" யாழ்ப்பாணத் தமிழரிடம் மட்டுமே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும்.  இந்த இடைநிலை பேச்சு வகை தமிழ்நாட்டு பழைய  சரித்திர  திரைப்படங்களில் காணப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்ட நிலை என்றே உருவாகியுள்ளது.  இந்த இடைநிலை பேச்சு வகை நண்பர்களிடையேயும்சமவயதினரிடையேயுமே அதிக வழக்கில் உள்ளது. சில சமயங்களில்  வயதில் பெரியவர்கள் வயது குறைந்தவர்களையும்தொழில் நிலைகளில் உயர்நிலையில் இருப்போர் மக்களையும் பேசும் இடங்கள் உள்ளன.  சிலநேரங்களில் இருவருக்கு இடையில் ஏற்படும் கருத்து முரண்பாட்டின் போது கோபத்தின் வெளிப்பாடாக மரியாதையை குறைத்து; "நீர்", "உமது", "உமக்கு" எனச் சுட்டுப்பெயர்கள் வடிவிலும் "இரும்",  "வாரும்",  "சொல்லும்",  "கேளும்", "கதையும்",  "என்ன சொன்னீர்?"  என வினைச் சொற்கள் வடிவிலும் பேச்சு வெளிப்படும் இடங்களும் உள்ளன.

உறவுமுறை யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழ்  வளம்

யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன.  பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம்.  ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம்.  எழுத்துத் தமிழில் கணவன் மனைவி என்ற சொற்களுக்கு ஈடாகயாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் புருசன், பெண்சாதி என்ற சொற்கள் பயன்படுகின்றன.  1707 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட தேச வழமைச் சட்டத்திலும் இச்சொற்களே கையாளப்பட்டுள்ளன.

பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள்தாய்தந்தைஆண் பிள்ளைகள்பெண் பிள்ளைகள் என்பவர்களாகும்.  இவர்களை அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும் அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும். தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும்தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர்இவர்களை முறையேஅப்புஆச்சி என அழைத்தனர்.  இடைக் காலத்தில் தந்தையை ஐயா என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. அக்காலத்தில்பெற்றோரின் பெற்றோரைபெத்தப்புபெத்தாச்சி, அம்மாச்சிஅப்பாச்சிஆச்சி என்றார்கள்.  இன்று அவர்கள் அம்மம்மாஅப்பம்மா, அம்மப்பாஅப்பப்பா,  (சில வீடுகளில் தாத்தாபாட்டி எனவும்) என அழைக்கப்படுகிறார்கள்.  இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரைபெரியப்புசின்னப்புபெரியாச்சிசின்னாச்சி, குஞ்சையாகுஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையாசின்னையா என்றும் அழைக்கப்பட்டுஇன்றுபெரியப்பாசித்தப்பாபெரியம்மாசின்னம்மா அல்லது சித்தி என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள்.
பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போதுபிள்ளை என்ற சொல்லே பயன்படுகின்றது.  ஆண் பிள்ளையை ஆம்பிளைப் பிள்ளை என்றும், பெண் பிள்ளையைப் பொம்பிளைப் பிள்ளை என்றும் குறிப்பிடுவது அங்குள்ள பேச்சுத்தமிழ் வழக்கு.  ஆம்பிளை என்பது ஆண்பிள்ளை என்பதன் திரிபு.  அதுபோலவேபொம்பிளை என்பது பெண் பிள்ளை என்பதன் திரிபு. எனினும் தற்காலத்தில்ஆம்பிளை என்பதும்பொம்பிளை என்பதும்ஆண்பெண் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதால்பிள்ளைகளைக் குறிக்கும் போதுஇன்னொரு பிள்ளைஎன்ற சொல்லையும் சேர்க்கவேண்டி ஏற்பட்டது.  உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை மகன் என்றும், பெண் பிள்ளையை மகள் என்றுமே வழங்குவர்.  யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில்இச்சொற்களை விளிச்சொற்களாகவும் பயன்படுத்தி வந்தாலும்பல குடும்பங்களில்ஆண்பிள்ளையைத் தம்பி என்றும், பெண்பிள்ளையை தங்கச்சிஅல்லது பிள்ளை என்றும் அழைப்பது வழக்கம்.
பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் உறவு முறைச் சொற்கள்அண்ணன்அக்காதம்பிதங்கச்சி என்பனவாகும்.  மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போதுபெரியசின்னஇளையஆசைசீனி போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்துபெரியண்ணன்ஆசைத்தம்பி, சின்னக்கா என்றோஅவர்களுடைய பெயரைச் சேர்த்துசிவா அண்ணாவாணியக்கா என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.

தந்தையின் உடன் பிறந்தாளைஅத்தை என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு.  தந்தையோடு பிறந்த பெண்களையும்தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும்மாமி என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம். எனினும்பழைய தலைமுறையினர்தாயோடு பிறந்த ஆணை அம்மான் என்றும்தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை மாமா என்றும் குறிப்பிட்டனர்.  இன்று அம்மான் என்ற சொல் கைவிடப்பட்டு,  மாமா என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.
மனைவி கணவனை  'இஞ்சாருங்கோ', அல்லது  'இஞ்சாருங்கோப்பா' என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது 'இஞ்சாருமப்பா' என்றுமோ அழைத்து வந்தனர்.  தற்போது வாழும் மூத்த தலைமுறையினர் தற்போதும் இப்படி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.  இளம் வயதினரில்கூட, மனைவி கணவனை  'அப்பா'  என்று அழைப்பது தற்போதும் வழக்கத்தில் உள்ளது.  அனேகமாக குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு 'அப்பா' என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டு வருவதனால் இம்முறை தோன்றியிருக்கலாம்.  தற்போது அனேகமாக கணவன் மனைவியை பெயரிட்டு அழைப்பதே வழக்கத்தில் உள்ளது.  மனைவியும் கணவனை பெயரிட்டு அழைப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமணமான புதிதில் மனைவி கணவனை அத்தான் என்று அழைக்கும் வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது.  ஆனால் இவ்வழக்கம் தமிழகத்துப் பழைய திரைப்படங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம்.  அக்காவின் கணவரை அத்தான் அல்லது மைத்துனர் என்றும்தங்கையின் கணவரை மச்சான் என்றும்அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் என்றும் அழைத்தனர்.  அண்ணி என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது.  மேலும் மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும்அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது.

யாழ்ப்பாணத்துக்குச் சிறப்பான சொற்கள்
யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் பயன்படுகின்ற சொற்கள் பல அப்பகுதிக்கேயுரிய சிறப்பான பயன்பாடுகளாக அமைகின்றன.  இவ்வாறான சொற்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.

பேச்சுத் தமிழ் (பொருள்)
ஆம்பிளை (ஆண்)
இளந்தாரி (இளைஞன்)
ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)
கதிரை (நாற்காலி)
கமம் (விவசாயம்/வயல்)
கமக்காரன் (விவசாயி)
காசு (பணம்)
காணி (நிலம்)
கொடி (பட்டம்)
சடங்கு (விவாகம்)
திகதி (தேதி)
பலசரக்கு (மளிகை)
பெட்டை (சிறுமி)
பெடியன் (சிறுவன்)
பேந்து/பிறகு (பின்பு)
பொம்பிளை (பெண்)
முடக்கு (பாதைத் திருப்பம்)
வளவு (வீட்டு நிலம்)
வெள்ளாமை (வேளாண்மை)
-
கதை (பேசு)
பறை (பேசு)
பாவி (பயன்படுத்து)
பேசு (ஏசு)
விளங்கு (புரிந்துகொள்)
வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)
ஆறுதலா (மெதுவாக)
கெதியா (விரைவாக)

பிறமொழிச் செல்வாக்கு
யாழ்ப்பாணம், 1591 ஆம் ஆண்டிலிருந்து, 1620 வரை போர்த்துக்கீசியரின் செல்வாக்கின் கீழும், 1620 தொடக்கம் 1658 வரை அவர்களின் நேரடி ஆட்சியிலும் இருந்தது.  யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட முதல் மேல் நாட்டவர் இவர்களே ஆனதால், பல மேல் நாட்டுப் பொருட்களும்கருத்துருக்களும் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது இவர்கள் மூலமேயாகும்.  இவற்றுடன் போர்த்துக்கீசிய மொழிச் சொற்கள் சிலவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் கலந்துள்ளன. உதாரணமாக,  அலமாரிஅன்னாசி, பீங்கான்கடுதாசிகோப்பை முதலான வார்த்தைகள் தமிழ் நாட்டில் போர்த்துக்கீசியர் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்தனால்யாழ்ப்பாணத்தைப்போல்தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் போத்துக்கீசிய மொழிச் சொற்கள் அதிகம் ஊடுருவவில்லை.
நெதர்லாந்து நாட்டு மக்களே, 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக ஆண்டபோதிலும்போர்த்துக்கீசியச் சொற்களைப் போல்டச்சு மொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இடம் பெறவில்லை.  எனினும்சில டச்சுச் சொற்கள் இன்னும் இங்கே புழக்கத்தில் இருந்துதான் வருகின்றன.  கக்கூசு (கழிப்பறை) கந்தோர் (அலுவலகம்) காமரா அல்லது காம்பறா (அறை)தேத்தண்ணி (தேநீர்) போன்ற சொற்கள் டச்சு மொழியிலிருந்து வந்தவையாகும்.
இது போன்றே, ஆங்கிலேயர் காலத்தில் வந்த பேச்சுத்தமிழ் இன்றும் தொடர்கிறது.  உதாரணமா, பஸ், டயர், இன்னும் பிற.
நம்  இலங்கை வாழ் நண்பர்கள் இக்கட்டுரையில் குறை இருப்பின் மன்னிக்கவும்.  மேலும், விடுபட்ட உங்கள் புழக்கத்தில் இருக்கும் தமிழ் வார்த்தைகளை மற்றவர்களோடு பகிருங்கள்.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் "...
 (Thanks: Wikipedia)

இனிய நண்பர்களே,
இது சற்று பெரிய பதிவு.  படித்து உங்கள் பின்னூட்டங்களையும் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.  திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பதிவை பகிர அனுமதித்த Ramkumar G Krish அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.
நன்றி நண்பர்களே.

i

i

i